25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


 புற்றுநோயைக் கட்டுப் படுத்தும் மனுகா தேன் (Manukahoney). 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 புற்றுநோயைக் கட்டுப் படுத்தும் மனுகா தேன் (Manukahoney). 

மனிதகுலம்  இனிப்புக்காக தேனைப் பயன்படுத்தி வருகிறது. அதன் மருத்துவ குணங்களுக்காகவே பல நாடுகளின் 

பாரம்பரிய வைத்தியத்தில் தேன் முக்கிய இடம் பிடித்துள்ளது. தேனில் பல வகைகள் உள்ளன. குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பூக்களிலிருந்து ,தேனீக்கள் தேனைச் சேகரித்து வைக்கும்போது, அவற்றின் சுவை, மருத்துவ குணம் தனித்து வம் நிறைந்ததாக இருக்கும்

.அப்படியான ஒன்று தான் மனுகா தேன்(Manukahoney). ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஒரு வகை 

மரம் மனுகா. இதிலிருந்து தேனீக்களால் சேக ரிக்கப்படும் தேனில் மருத்துவ குணம் அதிகம். பாக்டீரியா எதிர்ப்பு, நோய் எதிர்ப்புத் திறன்இந்தத் தேனுக்கு உண்டு என்பது ஏற்கனவே அறியப்பட்ட ஒன்று தான். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை, இந்தத் தேனை மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளது.

 

பொதுவாக மார்பகப் புற்றுநோய் செல்கள், ஈஸ்ட்ரோஜன் எனும் நாளமில்லா சுரப்பியைத் தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளும். இதைத் தடுக்கவே ரசாயன மருந்துகள் உப யோகப்படுகின்றன. இதற்கு மாற்றாகத் தான் தேனைப் பயன்படுத்தலாம் என்கிறது ஆய்வு. விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக மார்பகப் புற்றுநோய் கட்டிகளை உருவாக்கினர். அவற்றின் வளர்ச்சியை மனுகா தேன் கட்டுப்படுத்துவதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து எலிகள் மீது சோதித்தனர். மனிதர்களின் உடலில் உருவான புற்றுநோய்க் கட்டிகளை எலிகளில் பொருத்தினர். எலிக ளுக்குத் தேனை உண்ணக் கொடுத்தனர். இது, எலிகளின்   உடலில் வளர்ந்த கட்டிகளைப் பிற செல்களுக்கு எந்தச் சேதாரமும் இல்லாமல்84 சதவீதம் வரை அழித்துவிட்டது.மனுகா தேனுக்கு புற்றுநோயைக் கட்டுப் படுத்தும் திறன், மேற்கண்ட சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. இதனால், இந்த தேனை புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்த லாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News